டிக்கெட் விலைகளை உயர்த்திய லூவ்ரே அருங்காட்சியகம் – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum) சர்வதேச பார்வையாளர்களுக்கான நுழைவு விலைகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கமைய இரண்டு அடுக்கு டிக்கெட் முறையை செயல்படுத்தி வருகிறது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பெரும்பாலான குடிமக்கள் 32 யூரோக்கள் (£27) செலுத்துவார்கள். இது முந்தைய விலைகளுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும்.
வேலைநிறுத்தங்கள், கூட்ட நெரிசல் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய புதுப்பித்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும் டிக்கெட் விலைகளை உயர்த்தியுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த முடிவை பிரெஞ்சு தொழிலாளர் சங்கங்கள் கண்டித்துள்ளன. இந்நடவடிக்கையானது, அருங்காட்சியகத்தின் உலகளாவிய பணியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும், கலாச்சார அணுகலை ‘வணிகப் பொருளாக’ மாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.





