இழந்த பற்கள் மீண்டும் – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்
ஜப்பானில் பல் மருத்துவர்கள் பற்களை இழந்தவர்கள் புதிய பற்களை வளர்ப்பதற்கு வழிசெய்துள்ளனர்.
செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்குப் பதிலாகப் புதிய பற்களை வளர்க்கலாம் என்று பல் மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மீன்கள், ஊர்வனவற்றின் கோரைப் பற்கள் விழுந்துவிட்டால் அவை சொந்தமாகவே மீண்டும் வளரும். ஆனால் மனிதர்களுக்கும் பாலூட்டிகளுக்கும் வாழ்க்கையில் 2 முறை மட்டுமே பற்கள் வளரும்.
ஆயினும் பற்களின் ஈறுகளில் மூன்றாம் முறை அவை வளர்வதற்கான அரும்புகள் உள்ளதாக Kitano மருத்துவமனையின் பல் மருத்துவர் கூறினார்.
Kyoto பல்கலைக்கழக மருத்துவமனையில் அதற்கான பரிசோதனைகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கின. அதில் பெரியவர்கள் இழந்த பற்களை வளர்க்க உதவும் மருந்து அளிக்கப்பட்டது.
செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்கு அதிகச் செலவாகிறது. அதனால் பற்களை இயல்பாக வளர்ப்பது சிறந்த தீர்வு என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளர் கூறினார்.