லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ : ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க திட்டமிடும் அதிகாரிகள்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் முன்னேற்றம் காண்பார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதற்கிடையில் நேற்று (09.01) பிற்பகல் லாஸ் ஏஞ்சல்ஸின் வெஸ்ட் ஹில்ஸ் சுற்றுப்புறத்திற்கு அருகில் ஒரு புதிய தீ தொடங்கியது, இதனால் மேலும் வெளியேற்றங்கள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியைச் சேர்ந்த ஷெரிப் ராபர்ட் லூனாவின் கூற்றுப்படி, வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவுகள் “அதிகமாக பாதிக்கப்பட்ட” பகுதிகளை மட்டுமே பாதிக்கும் என்று லூனா கூறினார், அதிகாரிகள் முதன்மையாக கட்டாய வெளியேற்ற மண்டலங்களையே கவனித்து வருவதாகவும் கூறினார்.
ஈடன் பகுதியில் 4000 மேற்பட்ட கட்டடங்கள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.