கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட லாரி கிளீனர்கள் கைது
கோவை மாவட்டம் சூலூரில் லாரி கிளீனர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் சூலூர் படகு துறை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த லாரி ஒன்றை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த லாரியில் இருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்ண்டுள்ளனர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
மேலும் லாரியில் வைத்திருந்த அவர்களது உடைமைகளை சோதித்துப் பார்த்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த சுஜித் லாரி கிளீனர் ஆக வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் அவருக்கு உறுதுணையாக பட்டணம் புதூர் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் பீடம் பள்ளியைச் சேர்ந்த அஸ்வின் பாரதிபுரம் பகுதி சேர்ந்த சரவணன் ஆகிய மூவரும் கஞ்சாவை இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து நான்கு நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 50,000 வரை இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.