போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசா நோக்கி படையெடுக்கும் உதவி பொருட்களுடனான லொரிகள்
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையிலான போர் நிறுத்தம் காரணமாக, ஏராளமான உதவி பொருட்களுடனான லொரிகள் தற்போது சென்றுக் கொண்டிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ரபா எல்லை வழியாகவும், எகிப்து வழியாகவும் தெற்கு காசா பகுதிக்கு இந்த லொரிகள் சென்றுகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
எகிப்தின் ரபா கடவையில் நேற்று முதல் உதவி லொரிகள் காசா பகுதிக்குள் நுழையத் தயாராக இருந்ததாக உதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் உதவி லொரிகள் இன்னும் காசா பகுதிக்குள் நுழையவில்லை. தினமும் 2 அல்லது 3 லொரிகள் மட்டுமே பிரதேசத்திற்குள் நுழைகின்றன என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன பிரதேசத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து தெற்கு காசா பகுதிக்குள் எத்தனை லொரிகள் நுழைந்துள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பசியால் வாடும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு உணவளிக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 முதல் 600 லொரிகள் தேவை என ஐ.நா. மனிதாபிமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் நேற்று முதல் எகிப்தின் ரபா கடவையில் உள்ள கடவைக்குள் நுழைய உதவி லொரிகள் 200 லாரிகள் தயாராக இருந்ததாக உதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை காசா பகுதிக்குள் நுழைந்த முதல் நான்கு லொரிகள் மருத்துவமனைகள் மற்றும் உப்புநீக்கும் ஆலைகளுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்றுள்ளது.
இஸ்ரேலிய எதிர்ப்புகள் காரணமாக உதவி விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக காசா பகுதிக்கு அனுப்பப்பட்ட சில உணவுப் பொருட்கள் கெட்டுப்போகத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





