ஐரோப்பா

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் : கன்சர்வேட்டிவ் கட்சியின் தலை தப்புமா?

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மில்லியன் கணக்கான வாக்காளர்கள் இன்று (02.05) உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி தேர்தலாக இது கருதப்படுகிறது.

கருத்துக்கணிப்புகளின்படி இந்த உள்ளாட்சி தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலி நிச்சயமாக பொதுத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் என மதிப்பிடப்படுகின்றது. அதாவது தற்போது பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியானது ஆட்சியை இழக்கக்கூடும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆக இந்த உள்ளுராட்சி தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி கண்டால் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதை காட்டுகிறது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் ரிஷி சுனக் ருவாண்டா சட்டமூலத்தின் மூலம் பிரித்தானியர்களின் மனங்களை வெல்ல நினைப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர் முன்னெடுத்துள்ள இந்த புதிய திட்டம் பொதுத் தேர்தலில் தாக்கம் செலுத்துமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!