மேற்கு வங்கத்தில் உள்ளூராச்சி தேர்தல் வன்முறை! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேற்கு வங்கத்தில் உள்ளூராச்சி தேர்தல் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது
தெற்கு 24 பர்கானாஸில் ஒரு நபர் இறந்து கிடந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர், ஜூலை 9 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது.
ஜூலை 8ஆம் திகதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் 8ஆம் திகதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அங்கு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது