இலங்கை செய்தி

லிய சக்தி’ பெண் தொழில்முனைவோர் சந்தை ஆரம்பமானது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “லிய சக்தி” (Liya Shakthi) பெண் தொழில்முனைவோர் சந்தை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மாத்தறை கடற்கரைப் பூங்காவில் இன்று (07) ஆரம்பமானது.

சுமார் 300 பெண் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை வழங்கும் இந்த “லிய சக்தி” தொழில்முனைவோர் சந்தை, இன்று (07) மற்றும் நாளை (08) ஆகிய இரண்டு நாட்களும் மாத்தறை கடற்கரைப் பூங்காவில் நடைபெறவுள்ளது.

உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொள்வனவு செய்யவும், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்கிரமசிங்க, இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் ஜி.ஐ. சஜீவனி பெரேரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!