ஆஸ்திரேலியாவில் ஒன்லைனில் விற்கப்படும் உயிருள்ள புழுக்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் பல்வேறு நோய்களுக்காக ஒன்லைனில் விற்கப்படும் உயிருள்ள புழு இனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆஸ்திரேலிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உயிருள்ள புழுக்கள் குடல் தொற்று சிகிச்சைக்காக விற்பனை செய்யப்படுகின்றன.
எவ்வாறாயினும், இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு உயிருள்ள புழு இனமும் நோய்களுக்கு ஏற்றது அல்ல என மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயிருள்ள புழுக்களால் மற்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான போக்கு இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உயிருள்ள புழுக்களை ஒன்லைனில் சுமார் 50 டொலருக்கு வாங்கலாம். மருத்துவ அனுமதியின்றி உயிருள்ள புழுக்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்படாத உயிருள்ள புழுக்களை விற்பனை செய்ய தடை விதித்து மருந்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.