டெல்லி குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உயிருள்ள தோட்டா கண்டுபிடிப்பு
டெல்லியின் செங்கோட்டை அருகே இன்று ஒரு காரில் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் ஒரு உயிருள்ள தோட்டா கன்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு காவல்படை (NSG) புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.
இதனால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி





