தனது மாமாவை போர்களத்தில் இருந்து மீட்க கோரிக்கை வைத்த சிறுமி – செவிகொடுப்பாரா புட்டின்!
ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போர் நிலைமையால் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
ரஷ்யாவில் படுகாயம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமல் மீளவும் போர் களத்திற்கு அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் மொஸ்கோவின் ரெட் சதுக்கத்தில் நடத்த நிகழ்வொன்றில் 11 வயது சிறுமி ஒருவர் புட்டினிடம் தனது மாமாவை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே போரில் தனது தந்தையை இழந்த அவர், தற்போது தனது மாமா அங்கு முன்வரிசையில் பணியாற்றி வருவதாகவும் அவர் காயமடைந்த நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை எனக் கூறிய சிறுமி, அவரை ரஷ்யாவில் உள்ள நல்ல மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் கோரிக்கையை செவிமெடுத்த புட்டின் அவரின் நெற்றியில் முத்தமிட்டு, ‘நாங்கள் நிச்சயமாக அவரை கண்டுப்பிடிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
சைபீரியாவைச் Siberia சேர்ந்த சிறுமியான கிரா Kira தனது மாமாவின் பெயர் அன்டன் ஃபிஸ்யுரா’ Anton Fisyura எனக் குறிப்பிட்டார்.





