லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு : முழு விபரம் இதோ!

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் விலை குறைப்பு தொடர்பில் அறிவித்துள்ளார்த.
இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆகும்.
5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,652 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேபோல் 2.3 கிலோ சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 772 ரூபாவாக காணப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)