தனது அரசாங்கத்தின் கீழ் மதுபானம் இல்லாதொழிக்கப்படும் – சஜித் பிரேமதாச
தமது அரசாங்கத்தில் சிகரெட், போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை யதார்த்தமாக குறைக்க அல்லது முற்றாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அரச கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மதுபான சாலைக்கு உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக கோவில்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அருகாமையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொரளை யங் பௌத்த சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111 ஆவது ஸ்ரீலங்கா நிதான பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.