சவுதி அரேபியா சென்ற லயனல் மெஸ்ஸி – அதிரடி நடவடிக்கை எடுத்த தயாராகும் மெஸ்ஸி
பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி சவுதி அரேபியா சென்றதால் அணி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Paris Saint-Germain (PSG) அணியின் அனுமதியின்றி சென்றமையினால் அவர் மீது இரண்டு வாரத் தடை விதிக்கப்படலாம் என பிரான்ஸில் சில ஊடகங்கள் கூறின. ஒழுங்கு நடவடிக்கை நடப்பில் இருக்கும்போது அவர் பயிற்சி செய்யவோ விளையாடவோ முடியாது.
அவருக்குச் சம்பளமும் அளிக்கப்படமாட்டாது என்று ஒருவர் குறிப்பிட்டார். 36 வயது மெஸ்ஸி சென்ற ஞாயிற்றுக்கிழமை (30 ஏப்ரல்) PSG அணியும் Lorient அணியும் பொருதிய ஆட்டத்தில் விளையாடினார்.
அதில் PSG 3க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் மெஸ்ஸி சவுதி அரேபியாவின் சுற்றுலா துறையுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் அந்நாட்டிற்குச் சென்றிருந்தார்.
அதனால் திங்கட்கிழமை நடைபெற்ற அணியின் பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. மெஸ்ஸி மீது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டால் அவர் சில ஆட்டங்களில் விளையாட முடியாமல்போகலாம் என்று கூறப்பட்டது.
PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தக் காற்பந்துப் பருவத்தின் இறுதியில் முடிவுக்கு வருகிறது.அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற நிலையில், அவர் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.