பெல்ஜியத்திலிருந்து சென்ற விமானத்தில் மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட விபரீதம்
மின்னல் தாக்கியதால் பிரிட்டிஷ் TUI Airways விமானம் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.
கடந்த 22ஆம் திகதி விமானம் பெல்ஜியத்திலிருந்து எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் மின்னல் அதனைத் தாக்கியது. முன்னெச்சரிக்கையாக விமானம் பெல்ஜியத்துக்கு மீண்டும் திரும்பியதாக TUI நிறுவனப் பேச்சாளர் கூறினார்.
உரத்த சத்தம் கேட்டதாகவும் ஏதோ ஒன்று எரிவதைப் போன்ற வாசனையை நுகர்ந்ததாகவும் TUI பயணி ஒருவர் கூறினார்.
விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் நேர்ந்த அதே நேரத்தில் கத்தாருக்குச் சென்றுகொண்டிருந்த சரக்கு விமானத்தையும் மின்னல் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.





