உத்தரப் பிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி
சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட்(acid) வீச்சு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் துறவியாக வாழ்ந்து வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜேஷ் என்ற ஆயுள் தண்டனை கைதி சிவபுரி மாவட்டத்தில் உள்ள காயத்ரி சக்தி(Gayatri Shakti) பீடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1986ம் ஆண்டு, அப்போது புகார்தாரர்களான கங்காதீன்(Gangadeen) மற்றும் ஓம் பிரகாஷ் ரஸ்தோகி(Om Prakash Rastogi) ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின்(Uttar Pradesh) ஷாஜகான்பூர்(Shahjahanpur) மாவட்டத்தில் தங்கள் நகைக் கடைக்கு நகைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசிட் பாட்டிலை எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராஜேஷ் அவர்களை வழிமறித்து அடித்து தாக்குதலின் போது ஆசிட் பாட்டிலைப் பறித்து இருவர் மீதும் வீசியுள்ளார்.
பின்னர் அவர் மே 30, 1988 அன்று குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து பல வருட விசாரணை மற்றும் தேடுதல்களுக்கு பிறகு ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.




