ஐரோப்பா செய்தி

UK வில் பல்லைக்கழகத்தின் தவறால் பறிப்போன உயிர் : கௌரவ பட்டத்தை பெற்ற தாய்!

பிரித்தானியாவில் பட்டம் பெற தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஒருவரின் பட்டத்தை அவரது தாயர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்றுவந்த 23 வயதான ஈதன் ஸ்காட் பிரவுன் (Ethan Scott Brown) என்ற மாணவர் டிசம்பர் 2024 இல் பட்டம் பெறவிருந்தார்.

இருப்பினும், செப்டம்பர் 2024 இல், பல்கலைக்கழகம் அவருக்கு தவறான மதிப்பெண்ணை வழங்கிய நிலையில், அவர் பட்டம் பெற தகுதி பெறமாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் பட்டம் பெறவிருந்த டிசம்பர் 13, 2024 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

திங்கட்கிழமை, அவரது குடும்பத்தினர் அவரது சார்பாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது அவருக்கு கௌரவத்துடன் கூடிய BSc புவியியல் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டத்தை அவரது தாயார் டிரேசி ஸ்காட் பெற்றுக்கொண்டுள்ளார். பட்டம் வழங்குவதற்கு முன் கருத்து வெளியிட்ட  கிளாஸ்கோ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆண்டி ஸ்கோஃபீல்ட் (Andy Schofield), ஈதன் ஸ்காட் பிரவுன் துரதிர்ஷ்டவசமாக டிசம்பர் 2024 இல் தனது உயிரை இழந்தார்.

அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும், எங்கள் பல்கலைக்கழக சமூகத்திற்கும் ஒரு பெரும் இழப்பாகும்.

“இன்று நாம் அவரது சாதனைகள், அவரது கடின உழைப்பை ஒப்புக்கொள்கிறோம், கிளாஸ்கோ பல்கலைக்கழக வரலாற்றில் அவரது இடத்தையும், அவர் விட்டுச் சென்ற நீடித்த எண்ணத்தையும் மதிக்கிறோம்.

“அவரது வாழ்க்கை மற்றும் மரபுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், மேலும் இன்று எங்களுடன் இருந்ததற்காக அவரது குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஈதனின் தாயார் ஒரு உள்ளக விசாரணையில் மதிப்பெண் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பல்கலைக்கழகத்தின் தவறு காரணமாக அவருக்கு அந்தப் பாடநெறிக்கு தவறான மதிப்பெண் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிழையை கிளாஸ்கோ பல்கலைக்கழக ஊழியர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இரண்டு உள் தேர்வு வாரியங்கள் மற்றும் ஒரு வெளிப்புற தேர்வு வாரியம் அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை ஈதனின் மரணம் குறித்த விசாரணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

news sources : BBC

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!