தென்கொரியாவில் 02 மூத்த மருத்துவர்களின் உரிமங்கள் பறிப்பு!
தென் கொரிய அதிகாரிகள் இரண்டு மூத்த மருத்துவர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவப் பள்ளி சேர்க்கையை கடுமையாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் பயிற்சியில் உள்ள மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு, மருத்துவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் முதல் தண்டனை நடவடிக்கையாக இந்த இடைநீக்கங்கள் உள்ளன.
சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7,000 பயிற்சி மருத்துவர்களின் பதிவை ரத்து செய்ய தென்கொரியா முடிவு செய்துள்ளது.
மீண்டும் பணிக்கு வருமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)