பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ(Jair Bolsonaro) வெளியிட்ட கடிதம்
பிரேசிலின்(Brazil) முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ(Jair Bolsonaro) தனது கையால் எழுதப்பட்ட கடிதத்தை வெளியிட்டு 2026 ஜனாதிபதி போட்டியில் தனது மகன்களில் ஒருவருக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2022 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் சிறையில் உள்ள போல்சனாரோ, தனக்கு போட்டியிட முடியாததால் இடதுசாரி பதவியில் இருக்கும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை(Luiz Inacio Lula da Silva) எதிர்கொள்ளும் பணியை அவர் தனது மூத்த மகன் செனட்டர் ஃபிளேவியோ போல்சனாரோவிடம்(Flavio Bolsonaro) ஒப்படைத்துள்ளார்.
“இந்த அநீதி நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டு, மக்கள் விருப்பத்தை மௌனமாக்க அனுமதிக்கக் கூடாது என்ற உறுதியுடன், 2026ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு ஃபிளேவியோ போல்சனாரோவை முன் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்கிறேன்” என்று போல்சனாரோ கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பிறகு போல்சனாரோ இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு அறுவை சிகிச்சை நிறைவு





