தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்: இந்தியா, ஜேர்மன் அழைப்பு!
“ தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.”
இவ்வாறு இந்தியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இரு தரப்பு சந்திப்பின் ஈடுபட்டார்.
இதன்போதே இரு நாட்டு பிரதமர்களும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் மோதல், காசா நிலைமை மற்றும் பிற உலகளாவிய சவால்கள் குறித்தும் இருவரும் விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண்பதையே இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது என்று பிரதமர் மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் – பஹல்காம் தீவிரவாத தாக்குதல், டெல்லி கார் குண்டு வெடிப்பு ஆகியவற்றுக்கு இச்சந்திப்பின்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவும் ஜேர்மனியும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையாக நிற்கும் என்றும் உலக நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.





