ஐரோப்பா செய்தி

போர் பத்திரங்கள்’ வெளியிட வேண்டும் – பிரித்தானியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துமாறு வலியுறுத்தல்

பிரித்தானியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த போர் பத்திரங்கள் (War Bonds) வெளியிட வேண்டும் என்று லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி (Liberal Democrats) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் திட்டம் மூலம் £20 பவுண்ட் பில்லியன் வரை திரட்ட முடியும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட பத்திரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு கடன் வழங்கலாம்.

இவை வழக்கமான அரசாங்கப் பத்திரங்களைப் போலவே நிலையான வட்டியுடன் (Fixed interest) வழங்கப்படும்.

“இந்தப் பத்திரங்கள் சாதாரண மக்களுக்கு பிரித்தானியாவின் பாதுகாப்பில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் என லிபரல் டெமாக்ரட் தலைவர்
சர் எட் டேவி (Sir Ed Davey), கூறினார்.

அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், புதிய கடன் கருவிகள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவை பணத்திற்கான மதிப்பையும் பரந்த நிதி நோக்கங்களுடனான ஒத்துப்போகும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யாநடத்திய முழு அளவிலான படையெடுப்பு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அரசியல் களத்தில் தோன்றியதையடுத்து, பாதுகாப்பு செலவினங்களை உயர்த்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.

ட்ரம்ப், நேட்டோ நாடுகள் போதுமான அளவு இராணுவ செலவினம் செய்யவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

தொழிற்கட்சி அரசாங்கம், 2027 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு செலவினத்தை தேசிய வருமானத்தின் (GDP) 2.3% இலிருந்து 2.5% ஆக உயர்த்துவதாகவும், 2035 ஆம் ஆண்டுக்குள் 3.5% ஆக உயர்த்துவதாகவும் உறுதியளித்துள்ளது.

ஆனால், பிரித்தானியாவின் ஆயுதப் படைகளை முழுமையாக “போருக்குத் தயாராக” மாற்ற £28 பில்லியன் கூடுதலாக தேவைப்படும் என டைம்ஸ் (The Times) மற்றும் சன் (The Sun) பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், ஆயுதப்படைகளின் தலைவர் சர் ரிச்சர்ட் நைட்டன் (Sir Richard Knighton),
“முழு அளவிலான மோதலை எதிர்கொள்ள பிரித்தானியா இன்னும் போதுமான அளவில் தயாராகவில்லை” என்று எச்சரித்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது பயன்படுத்தப்பட்ட போர்ப் பத்திரத் திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும் இருக்கும் என்று லிபரல் டெமாக்ரட்டுகள் கூறுகின்றனர்.

அக்காலத்தில், “Lend to Defend” (பாதுகாக்க கடன் கொடுங்கள்) போன்ற வாசகங்களுடன் பொதுமக்கள் பத்திரங்களை வாங்க ஊக்குவிக்கப்பட்டனர்.

முதலீட்டாளர்களின் சந்தை நிபுணர் டான் கோட்ஸ்வொர்த் (Dan Coatsworth), “போர் பத்திரங்கள் பாதுகாப்புக்கான நிதியை திரட்ட உதவும், ஆனால் அவை நீண்டகால கடன் சுமையையும் உருவாக்கலாம்” என்று எச்சரித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!