யாழ்ப்பாணத்தில் பரவும் மற்றுமொரு ஆபத்து! இருவர் மரணம்
யாழ்ப்பாணப் பகுதியில் எலிக்காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
மழைக்காலம் என்பதால், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.




