செய்தி விளையாட்டு

லெஜண்ட்ஸ் லீக் இறுதிப் போட்டி – முதலில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது.

இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இருப்பினும் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடாமலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி