இந்தியா

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் இல்லாத ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி விளம்பரம் செய்ததில் மருத்துவர் ஒருவர் நஷ்டமடைந்து இருப்பதாக புகார் அளித்ததன் பேரில் தற்பொழுது நில மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக மகேஷ் பாபு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகேஷ் பாபு பணம், காசோலை மூலமாக ரூ.5.9 கோடிகள் பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் பணம் மட்டுமல்லாமல், சட்ட விரோதமாக வேறு ஏதேனும் பொருள் அல்லது அசையும், அசையா சொத்தும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

மேலும், சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழுமத்தின் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் அவர் பயன்படுத்திய பெயர்களில் இல்லாத ஓர் இடத்தின் பெயரையும் சொல்லியுள்ளார். அதுதான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம்.

மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், நடிகரை நம்பி முதலீடு செய்ததில் ரூ.34.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என குறிப்பிட்டு ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன்பேரில், மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம், விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணைக்கு முன்னிலையாகலாம் என்று கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே