மத்திய கிழக்கு

லெபனான் பேஜர் தாக்குதல்கள்: அனுமதி அளித்ததை ஒப்புக்கொண்ட பிரமர் நெதன்யாகு

கடந்த செப்டம்பர் மாதம், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய பேஜர் கருவிகளின் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தாம் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தார்.

அந்தத் தாக்குதல்களில் தாங்கள் ஈடுபட்டதை இஸ்ரேல் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அந்தத் தாக்குதல்களுக்குத் தங்களின் பரம எதிரியான இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா முன்னதாகக் குற்றஞ்சாட்டியது. ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு அந்தத் தாக்குதல்கள் பெரும் பின்னடைவாக அமைந்தது.அதற்குப் பதிலடி தரப்படும் என்றும் ஹிஸ்புல்லா உறுதியளித்தது.

“லெபனானின் பேஜர் தாக்குதலை நடத்துவதற்குத் தாம் அனமதி அளித்ததை நெட்டன்யாகு நவம்பர் 10ஆம் திகதியன்று உறுதிப்படுத்தினார்,” என்று நெட்டன்யாகுவின் பேச்சாளர் ஒமர் டொஸ்திரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடர்ந்து இரு நாள்களாக ஹிஸ்புல்லா அமைப்புகளுடன் செயல்பட்ட உளவாளிகள் அந்த அமைப்பு பயன்படுத்திய கைப்பிடி சாதனங்களை வெடிக்கச் செய்தனர். பேரங்காடிகள், சாலைகள், இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கருவிகள் வெடித்தன.

See also  வரலாற்றில் முதல்முறையாக சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு.!

அந்தத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 3,000 பேர் காயமுற்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content