லெபனான் – பெய்ருட் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. லெபனானியத் தலைநகர் பெய்ருட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரானிய ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபத்திய மையம் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.ஹிஸ்புல்லா தலைவர் ஹசான் நஸ்ருல்லாவைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 28ஆம் இகதி அதிகாலைக்கு முன்பாக 20க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது எனப் பெய்ருட் மக்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.தாக்குதல்கள் காரணமாகப் பெய்ருட்டின் தெற்குப் பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.ஆயிரக்கானோர் நகரின் பூங்காக்கள், சாலையோர நடைபாதைகள், கடற்கரைப் பகுதிகளில் கூடினர்.
செப்டம்பர் 27ஆம் திகதியன்றும் பெய்ருட் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.ஹிஸ்புல்லா அமைப்பில் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவுக்கு என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.ஆனால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஹிஸ்புல்லா அமைப்புடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
ஹசான் நஸ்ரல்லாவைப் பற்றி ஹிஸ்புல்லா அமைப்பு அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதிகளுக்குக் குறிவைத்திருப்பதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே, செப்டம்பர் 27ஆம் திகதியன்று பெய்ருட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் 91 பேர் காயமடைந்ததாகவும் லெபனானிய அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர்.ஆனால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தாக்குதல்கள் காரணமாக 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து அதிகாரிகள் கூறினர்.