லெபனான் -இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதல் : பிரஞ்சு வெளியுறவு மந்திரி லெபனான் விஜயம்!
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதலை தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Stéphane Séjourné லெபனானுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளையும், லெபனானின் பாராளுமன்ற சபாநாயகர், இராணுவத் தலைவர், வெளியுறவு அமைச்சர் மற்றும் காபந்து பிரதமர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனாலில் உள்ள போராளிக்குழுவான ஹிஸ்புல்லா ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக எல்லைப் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றது. இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய இராஜதந்திரிகள் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பகைமையை நிறுத்துவதற்கான தொடர்ச்சியான திட்டங்களை முன்வைத்துள்ள பின்னணியில் இந்த சந்திப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.