இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையின் தொழிலாளர் அமைப்பில் புகார் அளித்த லெபனான்
லெபனான் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) செப்டம்பர் மாதம் பேஜர்கள் வெடித்துச் சிதறிய தொடர் தாக்குதல்கள் தொடர்பாக புகார் அளித்துள்ளது.
லெபனான் தொழிலாளர் அமைச்சர் முஸ்தபா பயராம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐநா தலைமையகத்தில் முறையான புகாரை தாக்கல் செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான, தொழில்நுட்பத்துக்கு, வேலைக்கு எதிரான ஒரு பயங்கரமான போர் என்றார்.
“கண்டிக்கப்படாவிட்டால் இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும்,” என்று அவர் தாக்குதல்களைப் பற்றி தெரிவித்தார்.
இந்த வெடிப்புகள் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவை குறிவைப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)