எகிப்திய ஆர்வலரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடம் ஒப்படைக்க லெபனான் ஒப்புதல்
எகிப்திய எதிர்க்கட்சி ஆர்வலர் அப்துல் ரஹ்மான் அல்-கரதாவியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஒப்படைக்க லெபனான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை ஆதரவாக வாக்களித்த பின்னர், மறைந்த முஸ்லிம் சகோதரத்துவ மதகுரு யூசுப் அல்-கரதாவியின் மகனை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நாடு கடத்த உள்ளதாக லெபனான் பிரதமர் நஜிப் மிகாடியின் அலுவலகம் அறிவித்தது.
53 வயதான அவர் சிரியாவிலிருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே லெபனானில் டிசம்பர் 28 அன்று கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஆர்வலர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் மசூதியில் தன்னைப் பற்றிய வீடியோவைப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், கொந்தளிப்பான காலத்திற்குப் பிறகு சிரிய மக்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புவதாகக் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் அதிகாரிகளையும் அவர் விமர்சித்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய இரண்டும் அவரை நாடு கடத்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளன.
லெபனான் அரசாங்கத்தின் முடிவு, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய இரு நாடுகளுக்கும் ஒப்படைப்பதற்கான கோரிக்கைகளை அவசரமாக நிராகரிக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வந்துள்ளது.