பெய்ரூட்டில் வீசப்பட்ட இஸ்ரேல் துண்டுப்பிரசுரங்கள் – லெபனான் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் இன்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வீசியுள்ளது. இந்த பிரசுரங்களில் QR குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. குறியீடுகள் WhatsApp மற்றும் Facebook போன்ற சமூக தளங்களுடன் இணைந்து, ஆட்சேர்ப்பு முகவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது.
இந்நிலையில் இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வதில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காரணம், இதன் மூலம் கையடக்கத்தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மீறப்படக்கூடும், சட்டப்பொறுப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படலாம் என லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள், பொதுமக்கள் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யாமல், இந்த QR குறியீடுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த எச்சரிக்கை, சமூக ஊடகங்களில் தவறான இணைப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களை குறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது முக்கியம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டும் நோக்கத்தில் விடுக்கப்பட்டது.





