வங்கதேச தேர்தல் ஆணையர்கள் மீது வழக்கு தொடர்ந்த முன்னணி அரசியல் கட்சி
வங்கதேசத்தின் முன்னணி அரசியல் கட்சி, முன்னாள் தேர்தல் ஆணையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை ஆட்சியில் வைத்திருக்க கடந்த தேர்தல்களில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
ஹசீனா உட்பட 19 பேர் மீது புகார் அளித்துள்ளதாக வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தெரிவித்துள்ளது.
“அரசியலமைப்பை மீறியமை, தேர்தல் நடத்தை விதிகளை மீறியமை, அரசாங்க பதவிகளை வகித்த போதிலும் ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற உதவியது, பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டமை, போதுமான வாக்குகளைப் பெறத் தவறிய போதிலும் வேட்பாளர்களை வெற்றியாளர்களாக பொய்யாக அறிவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் சுமத்தியுள்ளோம்” என்று BNP மூத்த தலைவர் சலாவுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





