இராணுவ உறவை வலுப்படுத்த கூட்டு கடற்படைப் பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னணி நாடுகள்!
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகியவை கூட்டு கடற்படைப் பயிற்சிகள் மூலம் ‘இராணுவ நம்பிக்கையை ஆழப்படுத்த’ இலக்கு வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவ பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தும்” முயற்சியில் இந்த மாதம் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்தும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
ஈரானின் சாபஹார் துறைமுகத்தில் நாளை பயிற்சிகள் தொடங்கும் என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல்சார் இலக்கு தாக்குதல்கள், சேதக் கட்டுப்பாடு மற்றும் கூட்டுத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இந்தப் பயிற்சியில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





