ஆவா குழுவின் முக்கிய தலைவர் கொழும்பில் கைது
யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
72 வயதுடைய பெண் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் கல்கிசை பிரதேசத்தில் உள்ள இல்லத்தில் வைத்து வலனா எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் மாதாந்த வாடகையாக ரூ.25000 செலுத்தி கடந்த ஒக்டோபர் மாதம் முதல் குறித்த வீட்டில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் செல்ல தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் தெல்லிப்பளை, சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் கொலை, சொத்து சேதம், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் நபர்களால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாகவே சந்தேக நபர் இந்தக் குற்றங்களில் பலவற்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.