முன்ஜாமீன் வாங்கலாமா? விஜய் வீட்டிற்கு விரைந்த வழக்கறிஞர்கள் குழு
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு (மற்றும் சிலர்) எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதத்தை தடுக்கும் சட்டம் (TNPPDL Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக, காவல்துறை அதிகாரிகள் விஜய்யின் சென்னை இல்லத்திற்கே நேரடியாகச் சென்று கேள்விகளை எழுப்பலாமா என்பது குறித்து தற்போது தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
இது தொடர்பான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக சார்பாக இதில் தனி விசாரணை கேட்டு வழக்கு தொடுக்கலாம்.. அதாவது சிபிஐ, முன்னாள் நீதிபதி விசாரணை கேட்டு வழக்கு தொடுக்கலாம், விஜய்க்கு மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் வாங்கலாமா? என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்ய தவெக சட்டத்தரணிகள் குழு முடிவு செய்துள்ளதாம்.