சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

ஜனாதிபதியின் சட்டத்தரணி காமினி மாரப்பன இன்று (25) காலை காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று (25) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
காமினி மாரப்பன முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் சகோதரர் ஆவார்.
பல சர்ச்சைக்குரிய வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி காமினி மாரப்பன, 2021 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
மறைந்த காமினி மாரப்பனவின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)