கனடாவில் பிரபல தொழிலதிபரை கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்
கனடாவில் ஒரு கார் மீது லாரன்ஸ் பிஷ்னோய்(Lawrence Bishnoi) கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில்(Abbotsford) உள்ள தொழிலதிபரின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
பண கோரிக்கையை மறுத்ததால் தர்ஷன் சிங் சாஹ்சி கொலை செய்யப்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கோல்டி தில்லான்(Goldy Dhillon) குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த 68 வயதான தர்ஷன் சிங் சாஹ்சி, ஆடை மறுசுழற்சியில் முன்னணி நிறுவனமான கானம்(Canam) நிறுவனத்தின் தலைவராவார்.
இந்நிலையில், தர்ஷன் சிங் சாஹ்சியின் மரணம் அபோட்ஸ்ஃபோர்டு(Abbotsford) மற்றும் கனடாவில் உள்ள பஞ்சாபி சமூகத்தினரிடையே துக்கத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பல சமூகத் தலைவர்கள் இந்த சம்பவத்தை கனடாவில் குடியேறிய இந்தியர்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக விவரித்துள்ளனர் மற்றும் காவல்துறையினரிடமிருந்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.





