சிங்கப்பூரில் அமுலாகும் சட்டம் – கடுமையாகும் தண்டனை
சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் இனி குப்பைகளை வீட்டில் இருந்து வெளியே வீசுபவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை நேற்றைய தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி குப்பைகளை வெளியே வீசினால் முதல்முறை அபராதமாக 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக குப்பைகளை வெளியே வீசினால் 2,000 வெள்ளி வரையிலான அபராதமும், மூன்றுமுறை (அல்லது) அதற்கு மேல் குற்றம் செய்தால் 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய விதிமுறை கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதேபோல், வீட்டு உரிமையாளர்களும், வாடகைத்தாரர்களும் மேலும் பொறுப்பாகச் செயல்பட இந்த புதிய நடைமுறை உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.