இலங்கையில் இயற்றப்பட்ட சட்டம் – புதிய வீட்டை தேடுகிறாரா மஹிந்த?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொழும்பில் அவருக்கு ஒரு புதிய வீட்டைத் தேடத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சலுகைகளை பறிக்கும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து,மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வட்டாரத்தின்படி, ராஜபக்ஷ தனது பொது நிகழ்வுகளை எளிதாக்க போதுமான இடம் கொண்ட ஒரு வீட்டைத் தேடுவதாக கூறப்படுகிறது.





