தெஹிவளையில் மறைந்த விஜய குமாரதுங்கவின் சிலை சேதம்!

தெஹிவளை பொது சந்தைக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலையின் முகத்தின் இடது பக்கம் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிலை மீது கற்களை வீசிய இனந்தெரியாத சிலர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும்,இந்தச் சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் செயல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், சிலையின் ஒரு பகுதி இயற்கையாக இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வராததால் போலீசார் இதுவரை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
(Visited 11 times, 1 visits today)