‘கடைசி இராஜதந்திர சந்திப்பு’ – விடைபெற்றார் அமெரிக்க தூதுவர்!
தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் Julie Chang , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பிரியாவிடை பெற்றுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு தூதுவர் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa பாராட்டு தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொண்ட அசாதாரண துயர் சம்பவங்களின் போது இலங்கைக்கு மனிதாபிமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா ஊடாக பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட ஜுலி சங், கடந்த நாட்களாக ஜனாதிபதி உட்பட பலரையும் சந்தித்து பிரியாவிடை பெற்றார்.





