இலங்கை: பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடி! இரண்டு கடற்படை வீரர்கள் கைது

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு (02) கடற்படை வீரர்கள் கடற்படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான உள்ளக விசாரணையைத் தொடர்ந்து, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு (02) கடற்படையினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
02 கடற்படை வீரர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)