இலங்கையில் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 3 visits today)





