இலங்கையில் மற்றுமொரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது
மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட போதிலும் எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





