(New update)கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு : ஒருவர் பலி!
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த சில வர்த்தக நிலையங்கள்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மண்சரிவில் சிக்கியவர்களில் மூவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மேலும் ஐவர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் கண்டி – கொழும்பு பிரதான வீதி மாவனல்லை பகுதியில் மூடப்பட்டுள்ளது. மாற்று வீதியை பயன்படுத்துமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது
(Visited 1 times, 1 visits today)




