வியட்நாமில் பேருந்தின் மீது சரிந்து விழுந்த மண்மேடு – 06 பேர் பலி!
வியட்நாமில் ஆபத்தான மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று மண்ணில் புதையுண்டதில் 06 பேர் உயிரிழந்துள்ளடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கான் லே (Khanh Le ) வழியாக நேற்று பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதையின் இருப்புறமும் மண்சரிவு ஏற்பட்டதால் குறித்த இடத்தை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்தில் 32 பேர் பயணம் செய்ததாகவும், 04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 19 பேர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இருவரின் உடல்கள் பேருந்தில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





