மாத்தளைக்கு பேராபத்து!! பாறைகள் விழும் அபாயம்
மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து, சுமார் 400 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாத்தளை மாவட்டப் பிரிவின் தலைமை புவியியலாளர் சமிந்த மொரேமட இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது ஏற்பட்டுள்ள பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, 400 க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாத்தளை நகரைப் பார்த்தபடி அமைந்திருக்கும் தொடந்தெனிய மலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பாறைகள் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பொக்க, வுளுகல, ஹுனுகல மற்றும் ராவணகந்த ஆகிய மலைத் தொடர்களில் நிலவியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் சமிந்த மொரேமட கூறினார்.
பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களும் காலம் தாழ்த்தாமல், ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.





