கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு – பலர் புதையுண்டிருக்கலாம் என அச்சம்
கண்டி – கொழும்பு வீதியில் கண்டி, பஹால கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றின்மீது மண்மேடு விழுந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஒரு வழி போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வியாபார நிலையத்தில் இருந்த சிலர் மண்மேட்டில் சிக்குண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மீட்பு பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது.
வியாபார நிலையத்தில் எத்தனை பேர் இருந்தனர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
(Visited 5 times, 5 visits today)




