இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவு – 30 பேர் பலி, மழைக்கு மத்தியிலும் தொடரும் மீட்பு பணி!

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் கத்ரா மாவட்டத்தில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “மிகவும் துயரமானது” என்று கூறியதோடு, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரிடம் பேசியதாகவும், மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்ததாகவும் கூறினார்.
ம்பவம் நடந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர் மழைக்கு மத்தியில் மீட்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)