தென்மேற்கு பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் – நால்வர் பலி,32 பேர் காயம்
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் டர்பெட் நகரில் நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். இதில், பலூசிஸ்தானை சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடக்கம்.
நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ்சில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த கண்ணிவெடி தாக்குதலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தினரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் தாக்குதலுக்கு உரிமை கோரியது, அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை.