ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்தில் (Scotland) நில விற்பனை – அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை!

ஸ்கொட்லாந்தில் (Scotland)  தனியார் நில விற்பனையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் சில தனியார் நிறுவனங்கள் அல்லது பிரஜைகள் இடையே அதிகளவிலான நிலங்கள் காணப்படுவதை  நிவர்த்தி செய்ய விரும்புவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.

நில உரிமையாளர்கள் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த திட்டங்கள் சர்ச்சைக்குரியவை என விமர்சித்துள்ளனர். இந்த செயற்பாடு கிராமப்புற வணிகங்களை பாதிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் பலர் இந்த திட்டங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வலியுறுத்துகின்றனர்.

ஸ்கொட்லாந்தில் நிலம் குறித்த இந்த பிரச்சினை சில சமயங்களில் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. 1886 ஆம் ஆண்டு கிராஃப்டர்ஸ் ஹோல்டிங்ஸ் (Crofters’ Holdings)  குறிப்பிடத்தக்க சட்ட உரிமையை பெற்றது. இதனைத் தொடர்ந்து பல மக்கள் நிலங்களை கொள்வனவு செய்து நிர்வகித்து வந்தனர்.

முன்னாள் பசுமை எம்எஸ்பி ஆண்டி வைட்மேனின் (MSP Andy Wightman) ஆராய்ச்சி, சமீபத்திய ஆண்டுகளில் நில உரிமையாளர்களின் செறிவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் வசமுள்ள  50% சுமார் 420 பேருக்குச் சொந்தமானது என்று கூறுகிறது. சுமார் 4% சதவீதமான நிலங்களை தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ஸ்கொட்லாந்தில் தற்போது நிலங்களின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாக ஸ்காட்டிஷ் நில ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ஸ்கொட்லாந்தில் நிலசீர்த்திருத்தம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பயனுள்ள நிலத்தின் பற்றாக்குறை “சில சமூகங்கள் செழித்து வளர்வதைத் தடுக்கிறது” என்று நாடாளுமன்ற குழு கூறியுள்ளது.

நிலச்சீர்த்திருத்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய கூகியன் (Gougeon) , ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி நிலத்தின் உரிமையும் கட்டுப்பாடும் இன்னும் ஒப்பீட்டளவில் சிலரின் கைகளில் உள்ளது என்ற உரிமையை ஸ்காட்டிஷ் அரசாங்கம் உணரவில்லை என்று கூறினார்.

நில சீர்திருத்த சட்டமூலம், நில உரிமையின் செறிவை நிவர்த்தி செய்வதையும், தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் என்ன நடக்கிறது என்பதில் சமூகங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 6 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!